12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
கடந்த மே 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், தற்போது, மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
தீயணைப்புத்துறை டி.ஜி.பியாக கரண் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமனம் செய்யப்படுகிறார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாராக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சீமா அகர்வால் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதன் தமிழ்நாடு அரசு போலீஸ் வீட்டு வசதி துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்புக்கு சந்தீப் மிட்டல் மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.