பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தாயாரின் கோரிக்கையை ஏற்று, 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பேரறிவாளன் 30 நாட்களில் பரோலில் ஜெயிலில் இருந்து வெளியில் வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் நேரடியாக ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் . சிறை காவல்துறை பாதுகாப்பில் பேரறிவாளனுக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோலில் வெளியில் வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.