சென்னையில் மேலும் ஒரு தடுப்பூசி மையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆங்காங்கே தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே சென்று தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த மையத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகள், 14 செவிலியர்கள் மற்றும் 8 மருத்துவர்களுடன் செயல்பட உள்ளது.
இந்தத் தடுப்பூசி மையம் தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.