பலத்த சூறைக்காற்றுடன் இந்த மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!
மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘யாஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தீவிர புயலாக தொடர்ந்து 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா – மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் 26-ஆம் தேதி பாரதீப் -சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
வரும் 26ம் தேதி வட தமிழகத்தில் தரைக்காற்று பலமாகவும், சூறை காற்று வீசக்கூடும்.
27ம் தேதி மற்றும் 28ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழக கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.
4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.