கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பிடியில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்று மட்டுமே ஒரே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இவர்கள் தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை ரம்யா பாண்டியன் சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு செலுத்திக் கொண்டார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்ட பக்கத்தில். நான் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். தற்போது அவர், சூர்யாவின் தயாரிப்பில் இயக்கப்பட்டு வரும் படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.