சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்!
மூச்சுத்திணறல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து, மூச்சுத் திணறல் பிரச்சினைக்கு மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், உடல் நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் யாரையும் சந்திக்கக்கூடாது என்றும், முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.