‘கரிசல் குயில்’ கி.ரா.வுக்கு சிலை அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மறைந்த பிரபல எழுத்தாளர் ‘கரிசல் குயில்’ கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது -
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும். கி.ராஜநாராயணன் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
அத்துடன் கி.ரா.வின் படைப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கம் நிறுவப்படும். அதில் கி.ரா.வின் நினைவைப் போற்றும் வகையில் அவரது புகைப்படங்களும், படைப்புகளும் இடம் பெற்றிருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.