கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது - உயர்நீதிமன்றம்
கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தி உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி வரையிலேயே அனைத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. நீதிமன்றங்களும் வழக்கம் போல இயங்கி வந்தன.
இந்நிலையில், கீழமை நீதிமன்றங்கள் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் கூறுகையில், கொரோனாவால் நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.
