இராஜபாளையத்தில் விதிமுறையை மீறிய 2 பழக்கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி
tamilnadu
By Nandhini
இராஜபாளையத்தில் தமிழக அரசு உத்தரவை மீறி திறந்த இரண்டு பழக்கடைகளுக்கு சீல் வைத்து, 17 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது, காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அரசு உத்தரவை மீறி அனுமதியின்றி திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு பழ கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும், 17 ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து, அரசு உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.