டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ஓபிஎஸ்!

tamilnadu
By Nandhini May 16, 2021 08:10 PM GMT
Report

டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் டவ்தே புயல் உருவானது. இந்த புயலால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

குறிப்பாக, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், நீலகிரியில் வரும் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களில் டவ்தே புயல் தாக்கியது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, போடி தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான ஓபிஎஸ், கொச்சின் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததோடு, அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். 

டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ஓபிஎஸ்! | Tamilnadu