பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்!

tamilnadu
By Nandhini May 16, 2021 08:10 PM GMT
Report

இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சத்தை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏற்கெனவே ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.1 கோடி அளித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்தும் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

முதல்வரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை நாம் ஒழிக்க முடியும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்! | Tamilnadu