சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது - ஆணையர் ககன் தீப் சிங் பேடி
சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்திருக்கும் ஆக்ஸிஜன் செறியூட்டிகள் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஆகியோர் பார்வையிட்டு திறந்து வைத்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேசியதாவது -
சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நேற்று 20,000 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை இன்று 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் 40 சதவிகிதம் அளவுக்கு தான் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன் வாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.