ஊரடங்கில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகள் - எச்சரித்து அனுப்பிய காவல்துறை
tamilnadu
By Nandhini
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) பொதுமக்கள் வீடுகளில் இருக்காமல், இருசக்கர வாகனங்களில் சாலையில் சுற்றித் திரிந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களை பிடித்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து வருகின்றனர்.