தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த மாதம் 2 அல்லது 3ம் வாரத்தில் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை தொடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது. கொரோனா பரவலால் தமிழக அரசு மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் சந்தித்துள்ளது. முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்த தமிழக அரசு, தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் போதுமான அளவில் இல்லை. எனவே, தடுப்பூசிகளை தமிழக அரசே கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கான டெண்டரும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Rasipalan: மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும் புதன்- நஷ்டத்தையும், அவமானத்தை சந்திக்கப் போகும் ராசிகள் Manithan
