மாமியார் உடைத்தால் மண்குடம்... மருமகள் உடைத்தால் பொன்குடம் - பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் டுவிட்

tamilnadu
By Nandhini May 16, 2021 05:33 AM GMT
Report

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ரேசன் கடைகள் முன்பு அதிமுகவினர் பேனர் வைத்திருந்தனர். ஆனால், இதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இது குறித்து ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ஐகோர்ட் பேனர் வைக்க தடை விதித்தது. அதன் பின்னரும் அதிமுகவினர் சில இடங்களில் பேனர் வைத்தனர். ஐகோர்ட் உத்தரவை மீறி பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் அதிமுக பேனர்களை அகற்றக் கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் ரேசன் கடைகள் முன்பு திமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.

இது குறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று பதிவு செய்துள்ளார்.