நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார் – ரூ.5 லட்சம் வழங்கி 5 வரிகளில் முதல்வரை வாழ்த்திய வைரமுத்து!

tamilnadu
By Nandhini May 15, 2021 01:29 PM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 2ம் அலை அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயத்தில் தற்போது தமிழக அரசு உள்ளது. இதுபோன்ற கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை அளிக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

யார் யாரெல்லாம் நிதி கொடுக்கிறார்கள். அந்த நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொதுவெளியில் காட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இதனையடுத்து, சிறுவர்கள், சிறுமியர்கள் முதல் பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கினேன். மனம்விட்டு உரையாடினோம். முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்; நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்; செயல் குறித்தே திட்டமிடுகிறார்; நாடு காக்கத் துடிக்கும் நல்லவரை வாழ்த்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிக்கொள்ள வைரமுத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.