தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை - புனேவிலிருந்து 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன!

tamilnadu
By Nandhini May 15, 2021 09:44 AM GMT
Report

தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று, புனேவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு 6 லட்சம் கோவாக்சீன் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் 2ம் அலையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று, கூடுதலாக தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.

அதன்படி, புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 6 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் கொண்ட 50 பாா்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழக சுகாதாரத் துறையினா், சென்னை விமான நிலையத்தில் இந்த தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தின் மருத்துவ கிடங்கிற்கு 30 பாக்ஸும், பெரியமேட்டில் உள்ள மருத்துவ கிடங்கிற்க்கு 20 பாக்ஸும் வழங்கினர். 

தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை - புனேவிலிருந்து 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன! | Tamilnadu