தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
அரபிக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. இன்று அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத் தீவு பகுதியில் நிலை கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற உள்ளது.
இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் கனமழை பெய்யும்.
அதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.