மறைந்த சீமான் தந்தை செந்தமிழன் உடலுக்கு திமுக சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மலரஞ்சலி
மறைந்த சீமான் தந்தை செந்தமிழன் உடலுக்கு திமுக சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மலரஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில், அரணையூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, சீமான் சென்னையிலிருந்து விரைந்து வந்து தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீமானுக்கு ஆறுதல் கூறினார். அப்பொழுது முதல்வர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததை பெருமையாக கருதுவதாக சீமான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மறைந்த சீமானின் தந்தை செந்தமிழனின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, சீமானுக்கு ஆறுதல் கூறினார்.