உங்களது பிரார்த்தனைகளால் நான் நலமுடன் வீடு திரும்பினேன் - பொன்.ராதாகிருஷ்ணன்
நாடு முழுவதும் கொரோனாவின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பிடியில் மக்கள் மட்டுமின்றி, அரசியல்வாதி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர், கடந்த 6ம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதன் பின்னர், கொரோனாவிலிருந்து குணமடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வீடு திரும்பினார்.
இதனையடுத்து, வீடு திரும்பி்ய பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா.ஜ.கவின் தலைவர்கள், தாமரை சொந்தங்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளால் நலமுடன் சிகிச்சை முடிந்து திரும்பியிருக்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.