ஓ.பி.எஸ் சகோதரர் பாலமுருகன் மரணம் - ஆறுதல் சொன்ன எடப்பாடி

tamilnadu
By Nandhini May 14, 2021 08:30 AM GMT
Report

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஓ.பாலமுருகனை இழந்துவாடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.