கொரோனாவால் பலர் உயிரிழப்பதை அறிந்து மனவேதனை அடைகிறேன் - முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கடிதம்

tamilnadu
By Nandhini May 14, 2021 07:54 AM GMT
Report

கொரோனா பரவலில் பலர் உயிரிழப்பதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைகிறேன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.

கொரோனாவால் பலர் உயிரிழப்பதை அறிந்து மனவேதனை அடைகிறேன் - முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கடிதம் | Tamilnadu

மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், தமிழக முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலை மதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.