முதல்வரான மு.க.ஸ்டாலின் முதல் நாள் போட்ட கையெழுத்து - அமெரிக்கவாழ் தமிழ் பெண் வாழ்த்து!

tamilnadu
By Nandhini May 11, 2021 11:06 AM GMT
Report

2021ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி அடைந்தது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

தமிழக முதல்வர் ஆன அன்றே முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட ஐந்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இதில் கொரோனா சிகிச்சை கட்டணம், மகளிருக்கான பேருந்து கட்டணம் இலவசத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த செயலுக்காக தற்போது அமெரிக்க வாழ் தமிழ் பெண் செலின் கவுண்டர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், “இந்த கொரோனா காலத்தில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும், கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு இந்த மூன்று அறிவிப்புகளும் கொரோனா காலத்தில் அல்லல்படும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதலமைச்சரான உடனே இந்த நடவடிக்கைகளை எடுத்த ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்” என்று பதிவிட்டுள்ளார்.