ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று!
tamilnadu
By Nandhini
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 28 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரேநாளில் 232 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.