செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின- நோயாளிகள் அவதி
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் நிரம்பியதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் படுக்கை இல்லாமல் மரத்தடியிலும், மருத்துவமனை வாசலிலும் வெகுநேரம் காத்திருக்கின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மொத்தம் 480 படுக்கைகள் உள்ளது. இதில் 325 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண நிலையில் உள்ளது.
இந்நிலையில் இரவு 10 மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி உள்ள 325 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் காரணமாக நோயாளிகள் மயக்கமடைந்து மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, முறையான பதில் அளிக்க மறுப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.