தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்த இரு முன்னாள் அமைச்சர்கள்!
முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கமும், கே.பி. முனுசாமியும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
வைத்திலிங்கமும், கே.பி. முனுசாமியும் கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். அதனையடுத்து, இருவரும் 2020ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். அப்போது, இருவரும் வெற்றிபெற்றதையடுத்து, ராஜ்யசபா எம்.பி. ஆனார்கள்.
இந்த நிலையில், 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கமும், வேப்பனஹள்ளியில் முனுசாமியும் எம்எல்ஏவாக வெற்றிபெற்றார்கள். இதனையடுத்து, இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து எம்.பி. பதவியில் தொடர்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இருவருமே எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது முன்னாள் அமைச்சர்களான வைத்தியலிங்கம் ம்ற்றும் முனுசாமி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.