இறப்பிலும் இணைபிரியாத தம்பதி - சிவகங்கையில் நடந்த சோகச் சம்பவம்
இறப்பிலும் இணை பிரியாமல் மரணமடைந்த சோகச் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தம்பதி சுவாமிநாதன் – சுந்தராம்பாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்கள் மூவருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது.
இந்நிலையில், இந்த தம்பதி தனது மகன்களுடன் வசித்து வந்தனர். நேற்று காலை திடீரென சுந்தராம்பாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மாலையே அவர் மரணமடைந்தார். 57 வருடங்கள் சுந்தராம்பாளுடன் இருந்த சுவாமிநாதனுக்கு அவரது மறைவு மிகுந்த வேதனையை அளித்தது.
மனைவியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சுவாமிநாதன் மனமுடைந்திருக்கிறார். துக்கம் தாங்க முடியாமல் இன்று காலை சுவாமிநாதனும் உயிரிழந்துள்ளார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
திருமணமானதிலிருந்து ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த இந்த தம்பதி இறப்பிலும் இணை பிரியாமல் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.