அரியர் தேர்வில் குளறுபடி விவகாரம் - இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்வு எழுதுபவர்கள் தேர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரியர் தேர்வுக்குப் பணம் கட்டினால் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவுக்கும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஆன்லைனில் நடந்த பொறியியல் அரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, பி.இ அரியர் தேர்வு குளறுபடி தொடர்பாக இன்று மாலை முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார்.