எதிர்கட்சித் தலைவர் பெயரை முன்மொழிந்த ஓபிஎஸ் - அதிமுக கூட்டத்தில் நீடிக்கும் குழப்பம்!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த 7ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் பிடிவாதமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அன்று 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு அதிமுக கூட்டம் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும், ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையில் இழுபறி நடந்து வருவதால், யாரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பது என்று எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் திணறி வருகின்றனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென ஓபிஎஸ், முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ். திடீரென்று இப்படி சபாநாயகர் பெயரை முன்மொழிந்ததால், அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இழுபறி நீடித்துக் கொண்டேதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.