நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் மன்சூர் அலிகான் திடீரென்று இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக தோன்றியவர்தான் மன்சூர்அலிகான். இவர் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் திண்டுக்கல் வேட்பாளராக தேர்தல் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 201 ஓட்டுக்கள் வாங்கி படுதோல்வியைச் சந்தித்தார்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளதால் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளது.
நடிகர் விவேக் கடந்த மாதம் 17ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது, அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்தார் என்று மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், நடிகர் மன்சூர் அலிகான் சிக்கலில் மாட்டினார்.
இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.