ஊரடங்கில் விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது - டிஜிபி அறிவிப்பு!

tamilnadu
By Nandhini May 09, 2021 11:14 AM GMT
Report

ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறுவோரிடம், எந்த ஒரு சூழலிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்று காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளார் நாளை முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும், தனியார், அரசு பேருந்துகள், வாடகை டாக்சி, ஆட்டோ முதலிய வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடையே நடந்துகொள்ளக்கூடாது என்று காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை கூறியுள்ளார்.

ஊரடங்கில் விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது - டிஜிபி அறிவிப்பு! | Tamilnadu

இது குறித்து அவர் கூறியதாவது -

மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடினால், ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி தவிர்க்க வேண்டும். தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க கூடாது. ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறினால், வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது.

அப்படியே பறிமுதல் செய்தாலும் அதை சில மணி நேரங்களில் விடுவிக்க வேண்டும். ஊரடங்கில் விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.