மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் வந்து பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ம் தேதி தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார்.
அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், தொண்டர்களும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள், ஸ்டாலினின் வீட்டிற்கு வந்தார்கள். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.