பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு : அன்னையர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

tamilnadu
By Nandhini May 09, 2021 05:54 AM GMT
Report

இன்று அன்னையர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாய்மார்களுக்கு அவர்களின் பிள்ளைகள் வாழ்த்துகள் கூறி பரிசு கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். பலர் சமூகவலைத்தளங்களில் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், தாய் என்பவள் இந்த ஒரு நாள் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல. பெண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தாய் மொழி, தாய் நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று பதிவிட்டுள்ளார்.