கட்டண விதிமுறையை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவில்லை - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு, தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு விதித்த, கட்டண முறையை தனியார் துறை மருத்துவமனைகள் பின்பற்றவில்லை.
இதனால், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விரோனிகா மேரி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக பணம் பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் வெளிப்படை தன்மையுடன் இருந்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்தால், சாதாரண மக்களுக்கு படுக்கைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
மேலும், தனியார் மருத்துவமனைகள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.