திண்டுக்கல் ஐ.லியோனி - நாஞ்சில் சம்பத்தை நேரில் சந்தித்து நன்றி கூறினார் உதயநிதி
கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனியும், திமுக பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் திமுகவிற்காக தமிழகம் முழுவதும் சுற்றி தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்கள். இவர்களை நேரில் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நன்றி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‘கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணன் திண்டுக்கல் லியோனியைச் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டேன். என்னை அன்போடு வரவேற்று வாழ்த்திய அவர்களுக்கு என் நன்றி. திராவிட இயக்கத்தின் நயமிகு பேச்சாளர் என் மீது மாறா பாசம் கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளை பெற்றேன். கழக வெற்றிக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணன் அவர்களுக்கு அன்பும், நன்றியும் என்று கூறினார்.