தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் அருண்விஜய், நடிகை சிம்ரன்

tamilnadu
By Nandhini May 06, 2021 10:12 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கொரோனா அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை சிம்ரன் மற்றும் நடிகர் அருண் விஜய் கோரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து, அருண் விஜய் டுவிட்டர் பதிவில், ‘நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். உலகம் இந்த இருண்ட காலத்தினை எதிர்கொண்டுள்ள நிலையில், புத்திசாலித்தனமாக செயல்படுவது நமது சமூகப் பொறுப்பு. தயவுசெய்து எல்லோரும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போட்டுக்கொண்டு, வீட்டிலேயே இருங்கள்’என்று பதிவிட்டார். 

இதனையடுத்து, நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் , ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறார்கள். அதற்கு தடுப்பூசிதான் சிறந்த வழி. நான் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். உங்களைச் சுற்றியுள்ள உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் தயவுசெய்து உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.