நடிகர் பாண்டு மரணம் - ஓபிஎஸ் இரங்கல்

tamilnadu
By Nandhini May 06, 2021 09:44 AM GMT
Report

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், சிறந்த ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவிற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஓபிஎஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு -

கழகத்தின் கொடி மற்றும் சின்னத்தினை வடிவமைத்துக் கொடுத்தவரும் புரட்சித்தலைவரின் பால் பேரன்பு கொண்டவருமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சிறந்த ஓவியர் திரு.பாண்டு அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பாண்டு அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் இச்சூழலில் பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அவசிய தேவைகள் தவிர வெளியே செல்வதைத் தவிர்க்கும் அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.