கொரோனா பரவல் - இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்கு இலங்கை தடை
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
உ.பி., குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ஆக்சிஜன் இல்லாமல் வெவ்வேறு மாநிலங்களில் பல மனித உயிர்கள் மடிந்து வருகிறது. இந்நிலையில், உலகின் பிற நாடுகள் இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்குத் தடை விதித்திருக்கின்றன.
தற்போது அந்நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆதலால், இந்தியவர்கள் வந்தால் மீண்டும் கொரோனா அதிகரித்துவிடும் என்பதால் இம்முடிவை மற்ற நாடுகள் எடுத்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், அண்டை நாடான இலங்கை இந்தியாவிலிருந்து வருவதற்குத் தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. இருப்பினும், இந்தியாவிற்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளன.