அடுத்த தாக்குதல் - அதிமுக வேட்பாளர் கார் உடைப்பு - வீடியோ வைரல்

tamilnadu
By Nandhini May 05, 2021 10:49 AM GMT
Report

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்திற்குள் சென்று திமுகவினர் உணவுகளையும், பேனர்களையும் உடைத்து சூறையாடினர்.

இந்த சம்பவ குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதால் இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவரம் மு.க.ஸ்டாலினிடம் செல்லவே அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் இன்னும் ஆறாத நிலையில், தற்போது திருச்சி திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிமுக பிரதிநிதி பச்சமுத்து வீட்டில் புகுந்து திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அடுத்த தாக்குதல்’ என்று கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜே.என்.தானேஷ் முத்துக்குமார் காரை, குமாரசாமி கல்லூரி முன்பாக வழிமறித்து திமுகவினர் அடித்து உடைத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.