மதுரை அருகே நூறு வருடம் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது
மதுரை அருகே முனிச்சாலை பகுதியில் நூறு வருடம் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் அப்பகுதி பெரும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள முனிச்சாலை பகுதியில் மிக பழமையான நூறாண்டு கட்டிடம் இருந்தது. இன்று மதுரை மாநகர் பகுதிகளில் சற்று மிதமான மழை பொழிந்தது. இதன் காரணமாக இன்று நூறு வருடம் பழமையான வணிக வளாகம் இடிந்து விழுந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனே சென்ற போலீசார் கட்டிடத்தைச் சுற்றி தடுப்பு வேலி அமைத்து பொதுமக்கள் யாரும் அந்த பக்கம் செல்லாமல் வழி வகுத்தனர். அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரிடம் காவல்துறையினர் கைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியபோது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. என் கட்டிடத்தில் பாடலில் இருப்போர் வழக்குப் போட்டுள்ளனர். ஆகையால், இது சம்பந்தமாக என்னால் செய்ய முடியாது என்று சொன்னதாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது பக்கத்தில் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் இழப்பும் அங்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.