ஆற்காடு வீராசாமி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. அப்போது திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் 7ம் தேதி திமுக தலைவர் தமிழக முதல்வராக பதறியேற்க இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் உதவித் துணைத் தலைவர் மணிகண்டன் நாயர், பொது மேலாளர் மெய்யப்பன், ‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு நா.வீராசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.