1212 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி நிரந்தரம் - மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

tamilnadu
By Nandhini May 05, 2021 05:56 AM GMT
Report

1212 ஒப்பந்தச் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஏற்கெனவே, 1212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் அறிவித்தார். இவரது அறிவிப்பால், செவிலியர்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியை அர்ப்பணிப்புடன் செய்துக் கொண்டிருக்கும் எங்கள் செவிலியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்மட்ட குழுவை அமைத்து முன் களப்பணியாளர்கள், செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைக்கு நன்றி.

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடந்த ஆறு வருடமாக மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் செவிலியர்கள் முதற்கட்டமாக 1712 பேரை பணி நிரந்தரம் செய்து ஆணை வழங்கி அதை வரவேற்கிறோம்.

மேலும் இந்த நடவடிக்கைக்கு எங்கள் சங்கத்தின் சார்பாகவும் , பணி நிரந்தரம் பெருமானைத் அவர்களின் குடும்பங்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இதுபோன்ற தலைவர் என்ற நம்பிக்கையுடன் தமிழக அரசு நோய் தடுப்பு மற்றும் அனைத்து சுகாதார திட்டங்களும் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் , செயல்பட எங்களுடைய செவிலியர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இதற்கான முயற்சியை செய்த சுகாதாரத் செயலாளர் , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.