மண்ணையும், பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது... மக்களே உஷார் - காயத்ரி ரகுராம் டுவிட்

1 week ago

திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், திடீரென்று அம்மா உணவகத்தினை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னை முகப்பேறில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்திற்குள் இன்று காலை மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடினார்கள். அதுமட்டுமின்றி அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வந்த அம்மா உணவகம் சூறையாடப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், மண்ணையும், பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது. மக்களே உஷார் என்று பதிவிட்டுள்ளார். 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்