பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – உதயநிதி ஸ்டாலின்!

1 week ago

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.

இவர் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது -

தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி. மக்களின் கோரிக்கை அனைத்தையும் 7ம் தேதிக்கு பிறகு நிறைவேற்றுவேன். மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பேசினார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்