சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணமடைந்தார்!

1 week ago

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

தமிழக மக்கள் மத்தியில் சமூக ஆர்வலராக மிகவும் பிரபலமானவர் டிராபிக் ராமசாமி (87). இவர் பல்வேறு வழக்குகளில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியைக் கண்டவர். சாமானிய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 4ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இந்நிலையில், சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரபலங்களும், சமூகவலைதளவாசிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்