மு.க.ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன்- நடிகர் பார்த்திபன்

tamilnadu
By Nandhini May 04, 2021 09:32 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இது குறித்து நடிகர் ஆர்.பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று… இதோ… இப்போது உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல… உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக! வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும், மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும். கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”- என மஞ்சள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் என்று பதிவிட்டிருந்தார். 

இந்த டுவிட்டுக்கு பலரும் புரி்யாமல் விழிக்க, அந்த கோவை வீடியோவையும் தனது பக்கத்தில் ஷேர் செய்து, ‘முதல் மஞ்சள் மரியாதை!’என்று பதிவிட்டுள்ளார்.