4 ஆண்டுகள் எளிமையான ஆட்சித் தந்த முதல்வர் பழனிச்சாமிக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து
4 ஆண்டுகள் எளிமையான ஆட்சியை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் தள்ளப்பட்டது.
எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மாபெரும் வெற்றி பெற்றார். இத்தேர்தலில், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, ஜெயக்குமார் , எம்.சி.சம்பத், நடராஜன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், பாண்டியராஜன், ராஜலட்சுமி, சரோஜா, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இயக்குநர் சேரன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘ஜெயலலிதா மறைவுக்குப்பின் 4 வருடங்கள் எளிமையான ஆட்சியை தந்த திரு. முதல்வர் பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றி. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு பதிவில், மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது. சீமானுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.