நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துக்கள் - இயக்குநர் பாரதிராஜா
தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கு, முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகர மேயராக பணியாற்றியபோது மிகச் சிறந்த நிர்வாகியை கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமையவுள்ள அரசிடம் இருந்து எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
Greetings letter from
— Nikil Murukan (@onlynikil) May 3, 2021
President @offBharathiraja & Members of @tfapatn
To DMK-President, Thiru@mkstalin for his & Party's Success in Assembly Elections
& Wishing him for Swearing in as Honourable Chief Minister of Tamil Nadu. @arivalayam #NikilMurukan #NMNews23 #NM pic.twitter.com/Eb5ZL7kG9I
தந்தையின் வழியில் தமிழின மேன்மைகளையும் பாதுகாத்து தமிழக உரிமைகளை மீட்டெடுத்தல் தமிழையும் தமிழர்களின் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
மக்கள் எதிர்பார்த்த ஒரு மாற்றத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. கொரோனா காலகட்டம் மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதார பிரச்சினைகளை சரி செய்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர்நோக்கி இருக்கிறோம். உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும்.
மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துக்களைத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.