மரணத்திலும் இணை பிரியாத தம்பதிகள் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

tamilnadu
By Nandhini Apr 30, 2021 12:41 PM GMT
Report

வாணியம்பாடி அருகே கணவர் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள குப்புசாமி தெருவில் வசித்து வந்தவர் அண்ணாமலை (80). அவரது மனைவி லட்சுமி அம்மாள் (70). இருவரும் வாழ்க்கையில் அன்பின் அடையாளமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், அண்ணாமலை ஒரு ஜவுளி வியாபாரி. மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைகள் என 7 பேருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். திடீரென அண்ணாமலைக்கு உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தியை கேட்டதும், லட்சுமி அம்மாள் கணவரின் சடலம் அருகே வந்து நின்றபோது சட்டென மயங்கி கீழே விழுந்தார்.

பிள்ளைகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கணவர் இறந்த உடனே துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மரணத்திலும் இணை பிரியாத தம்பதிகள் - சோகத்தில் மூழ்கிய கிராமம் | Tamilnadu