மதுரையில் கொரோனா பரவலை ஒழிக்க 508 தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு
மதுரையில் கொரோனா பரவலை ஒழிக்க 508 தேங்காய் வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதனையடுத்து, கபசூர குடிநீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் சுமார் 16,000த்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் கொரோனா பரவலை ஒழிப்பதற்காக 508 தேங்காய்களை வைத்து பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் இந்த வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு கபசுரக் குடிநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.